அமேசான் நிறுவனருடன் நடிகை திருமணத்துக்கு ரூ.5000 கோடி செலவு

லாஸ்ஏஞ்சல்ஸ்: அமெரிக்க நடிகையை திருமணம் செய்ய உள்ள அமேசான் நிறுவனர், ரூ.5 ஆயிரம் கோடி செலவில் இந்த திருமணத்தை நடத்துகிறார். முக்கியமான உலக செல்வந்தர்களில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஒருவர். இவருக்கு 60 வயதாகிறது. கடந்த 2018ம் ஆண்டு தனது மனைவி மெக்கன்சி ஸ்காட் என்பவரை விவாகரத்து செய்தார். இதற்காக, அவர் ஏராளமான பங்குகளை தனது முன்னாள் மனைவிக்கு கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து தொலைக்காட்சி நடிகை லாரன்ஸ் சான்செஸ் (54) என்பவரை கடந்த 2019ம் ஆண்டிலிருந்து காதலித்து வருகிறார். இவர்கள் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தனர். இப்போது வரும் 28ம் தேதி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இந்த திருமணம் அமெரிக்காவின் ஆஸ்பென் சிட்டி ஹால் நகரில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் படு தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த திருண விழாவை 3 நாட்கள் தொடர்ந்து நடத்த முடிவு செய்துள்ளார் ஜெஃப். இதற்காக 600 மில்லியன் டாலர் செலவழிக்கப்பட உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.5096 கோடியாகும். இந்த திருமண விழாவில் உலகின் பல்வேறு நாடுகளின் சிறப்பு உணவுகள் பரிமாறப்பட உள்ளது. மொத்தம் 1200 வகை உணவுகள் இந்த விருந்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமண விழாவில் பில்கேட்ஸ், லியோனார்டோ டிகாப்ரியோ, ஜோர்டானின் ராணி ரானியா உள்பட பல பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள்.

Related Stories: