மழையில் நனைகிறேன் விமர்சனம்…

யுஎஸ் சென்று எம்எஸ் படிக்க வேண்டும் என்பது ரெபா ஜானின் லட்சியம். இதற்காக அவர் ஆயத்தமாகும்போது, கோடீஸ்வர வீட்டுப்பிள்ளை அன்சல் பாலின் கண்ணில் தென்படுகிறார். கண்டதும் காதல் கொள்ளும் அன்சல் பால், ரெபா ஜானின் மனதில் இடம்பிடிக்க முயற்சிக்கிறார். காதலுக்கு மதம் குறுக்கே நின்றாலும், பிறகு இருவரும் காதலிக்க நேரும்போது விபத்து நடக்கிறது. இருவரும் பிழைத்தார்களா? அவர்களின் காதல் என்ன ஆனது என்பது மீதி கதை.

பேமிலி ஃபீல்குட் லவ் ஸ்டோரியாக உருவாகியுள்ள இதை டி.சுரேஷ் குமார் எழுதி இயக்கியுள்ளார். கிறிஸ்தவக் குடும்ப தம்பதியாக வரும் மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், ஒரே மகன் அன்சல் பால் மீது காட்டும் அன்பு நெகிழ வைக்கிறது. கோடீஸ்வரனாக இருந்தாலும், ஊதாரித்தனமாக ஊர் சுற்றும் அன்சன் பால், ரெபா ஜானின் காதலுக்காக உருகி தன்னை மாற்றிக்கொள்கிறார். அவரும், ரெபா ஜானும் பொருத்தமான ஜோடி. அவரது தந்தையாக ‘சங்கர் குரு’ ராஜா, வழக்கமான பாசத்தை வெளிப்படுத்துகிறார்.

கிஷோர் ராஜ்குமார், வெற்றிவேல் ராஜா உள்பட அனைவரும் கேரக்டரை மீறாமல் இயல்பாக நடித்துள்ளனர். காதல் மற்றும் பாடல் காட்சிகளில் ஜே.கல்யாணின் ஒளிப்பதிவு தரமாக இருக்கிறது. விஷ்ணு பிரசாத்தின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை படத்துக்கு உதவி செய்துள்ளது. விஜி, கவின் பாண்டியனின் வசனங்கள் இயல்பாக இருக்கிறது. படத்தின் நீளத்தைக் குறைத்திருக்க வேண்டும்.

Related Stories: