சென்னை: விவிஎஸ் சுப்ரீம் பிலிம்ஸ் சார்பில் வினோத் வி சர்மா தயாரிப்பில் உருவாகும் படம் ‘சதுரங்க ஆட்டம் ஆரம்பம்’. எம்.வி. ராமச்சந்திரன் இயக்குனராக அறிமுகமாகிறார். ‘முருகா’ அசோக் குமார், மரகதக்காடு படத்தில் நடித்த நடிகர் அஜய். மேலும் ஒரு ஹீரோ நடிக்கின்றனர்.கதாநாயகியாக சோனியா நடிக்க காமெடி நடிகர் மாறன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் பேரரசு, ஆர்.அரவிந்தராஜ், நடிகர் சக்தி குமார் பங்கேற்றனர்.
பேரரசு பேசும்போது, ‘முன்பெல்லாம் பத்திரிகை, டிவி விமர்சனங்களை பார்த்துவிட்டு மக்கள் படத்திற்கு சென்றார்கள். இப்போது மக்களே விமர்சகர்கள் ஆகிவிட்டார்கள். மக்களுக்கு பயந்து நாம் படம் எடுக்க வேண்டும். நிறைய சிறு தயாரிப்பாளர்கள் இப்படி நிறைய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது என்பது ஒரு மிகப்பெரிய புண்ணியம். அந்த புண்ணியமே உங்களுக்கு வெற்றியாக அமையும்’ என்றார்.