ஆனால், முழுக்க முழுக்க என்மீதான தனிப்பட்ட வெறுப்பால் மட்டுமேயான உங்களின் இந்த நடவடிக்கையை எப்படி நான் ஏற்க முடியும்? தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட, ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு 10 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்பது மிகவும் விசித்திரமானதாக இருக்கிறது என்று கட்டமாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், தனுஷின் தந்தையும், இயக்குனரும், நடிகருமான கஸ்தூரிராஜா அளித்துள்ள ஒரு பேட்டியில், `எங்கள் முதுகுக்குப் பின்னால் பேசுபவர்கள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது. என் மகனுக்கும் அப்படித்தான். நிற்கவே நேரம் இல்லாமல் ஓடுகிறோம்.
இந்த நிலையில், மற்றவர்களுடைய விமர்சனங்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை. ஆனால், ஒன்று மட்டும் என்னால் சொல்ல முடியும். தனுஷிடம் என்ஓசி வாங்குவதற்கு 2 வருடங்கள் காத்திருந்ததாக நயன்தாரா சொல்வது எல்லாமே பொய். மேலும் இதுகுறித்து பேச விரும்பவில்லை. நானும், என் மக னும் இப்போது வேலையில் மட்டும் கவனம் செலுத்துகிறோம்’ என்று கூறியுள்ளார்.தற்போது தனுஷ் 2 படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார். ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’, ‘இட்லி கடை’ ஆகிய படங்களை இயக்கி வரும் அவர், ‘குபேரா’ என்ற படத்திலும் நடிக்கிறார். இதுவரை அவர் நயன்தாராவின் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.