மலையாள இயக்குனருடன் நடிகை ரவீணா திருமணம்

திருவனந்தபுரம்: பிரபல நடிகையும், டப்பிங் கலைஞருமான ரவீணா ரவி, மலையாள சினிமா டைரக்டர் தேவன் ஜெயக்குமார் காதல் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ரவீணா ரவி. இவர் பிரபல டப்பிங் கலைஞரும், பாடகருமான ரவீந்திரநாத் மற்றும் டப்பிங் கலைஞரும், நடிகையுமான ஸ்ரீஜா ரவி ஆகியோரின் மகள் ஆவார்.

தமிழில் ராக்கி, லவ் டுடே, மாமன்னன் உள்பட பல படங்களில் ரவீணா நடித்துள்ளார். இந்நிலையில் ரவீணா ரவி மலையாள டைரக்டர் தேவன் ஜெயக்குமாரை திருமணம் செய்ய உள்ளார். தேவன் ஜெயக்குமார் மலையாளத்தில் சமீபத்தில் வெளியான ‘வாலாட்டி’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

Related Stories: