முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியுடன் நயன்தாரா பிசினஸ்

மும்பை: 9ஸ்கின் என்ற அழகு சாதனப் பொருட்கள் நிறுவனத்தை நயன்தாரா நடத்தி வருகிறார். இந்நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்படும் பொருட்கள், ரூபாய் 999 முதல் அதிகபட்சமாக ரூபாய்.1899 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மிக குறுகிய காலத்திலேயே, 9 ஸ்கீன் அழகு சாதன பொருட்கள் நல்ல வரவேற்பை பெற்றது தொடர்ந்து, தன்னுடைய பிஸினஸை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல முகேஷ் அம்பானியின் வாரிசான இஷா அம்பானியுடன் கைகோர்த்துள்ளார் நயன்தாரா.

ஜவான் இந்தி படத்தில் நயன்தாரா நடித்தார். அப்போது முதல் அவர் இஷா அம்பானியுடன் நட்பு வளர்த்து வருகிறார்.இந்நிலையில் இஷா அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்துடன் நயன்தாரா பங்குதாரராக மாறியுள்ளார். இஷா அம்பானி தலைமையிலான இயக்கும் தீராவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார் நயன்தாரா. எனவே இனி 9ஸ்கினின் தயாரிப்புகள் ரிலையன்ஸ் ரீடெய்ல்ஸ் இணையதளத்திலும் கிடைக்கும்.

Related Stories: