சென்னை: தெலுங்கு மற்றும் தமிழில் கொரட்டால சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர், சயீஃப் அலிகான் நடித்துள்ள ‘தேவரா’ என்ற படத்தின் முதல் பாகம் நாளை திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் இசை அமைப்பாளர் அனிருத்தை மனம் திறந்து பாராட்டியுள்ள ஜூனியர் என்டிஆர், ‘அனிருத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தொடர்ச்சியான வெற்றிகளை குவித்த இசை அமைப்பாளர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் ஒருகட்டத்துக்கு மேல் வெளியேறிவிடுவார்கள். ஆனால், அனிருத் வழக்கமான இசை அமைப்பாளர் அல்ல என்று உணர்கிறேன். அவர் தனது பாடல்கள் ஹிட்டாக வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைக்கிறார். ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ ஆகிய படங்களில் அனிருத்தின் பின்னணி இசை கொண்டாடப்பட்டது. இரண்டே நாட்களில் ஒரு பாடல் கொடுக்க வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டாலும், எந்தவொரு அழுத்தமும் இல்லாமல் இருப்பது அனிருத்திடம் நான் பார்க்கும் இன்னொரு குணம். ‘தேவரா’ படத்தில் அவர் மிகப்பெரிய உழைப்பையும், அர்ப்பணிப்பையும் வழங்கியுள்ளார்’ என்றார்.
The post அனிருத்துக்கு ஜூனியர் என்டிஆர் பாராட்டு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.