மலையாளத்தில் கலக்கும் ருதிரம்

சென்னை: சமீபத்தில் திரைக்கு வந்த ‘ருதிரம்’ படத்தை ஜிஷோ லான் ஆண்டனி இயக்கியிருக்கிறார், அதில் அபர்ணா பாலமுரளி மற்றும் ராஜ் பி ஷெட்டி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் வெளியான பிறகு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. அதீத உணர்ச்சிகளுடன் கூடிய திகில் மற்றும் மனம் ஈர்க்கும் கதையம்சங்களை மையமாகக் கொண்ட ‘ருதிரம்’, அழுத்தமான திரைக்கதை, வலுவான நடிப்பு, கவர்ந்திழுக்க கூடிய ஒளிப்பதிவின் மூலம் சிறந்த மலையாள படங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. ஜேசனாக அறிமுக நடிகர் பி.கே.பாபு அளித்த நடிப்பு, ‘ருதிரம்’ திரைப்படத்தின் சிறந்த அம்சங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தன் முதல் படத்தைக் குறித்து பி. கே. பாபு கூறியதாவது: அபர்ணா பாலமுரளி, ராஜ் பி ஷெட்டி போன்ற அபாரமான நடிகர்களுடன் திரையை பகிர்ந்து கொள்வதுடன் திறமையான குழுவுடன் பணிபுரிய கிடைத்த வாய்ப்பு, எனது கனவு பலித்த தருணம். ரசிகர்களிடமிருந்து வரும் ஆதரவும் நன்றியுணர்வும் எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றன என்றார்.

Related Stories: