×

பாளை. மேடை தளவாய் கூட்டுறவு மேலாண் நிலையத்தில் முழுநேர கூட்டுறவு பட்டயப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆக.22 வரை அவகாசம்

நெல்லை, ஆக.3: தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் ஓர் அங்கமாக செயல்படும் பாளை. மேடை தளவாய் கூட்டுறவு மேலாண் நிலையத்தில் 2025-26ம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர்ந்து பயில விரும்புவோர் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 22ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆக. 22ம்தேதி மாலை 5 மணி வரைஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் நெல்லை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் ஓர் அங்கமாக நெல்லை பாளையங்கோட்டை என்ஜிஓ பி காலனி உதயாநகரில் பாளை. மேடை தளவாய் கூட்டுறவு மேலாண் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் 2025-26ம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர்ந்து பயில விரும்புவோருக்கான மாணவர் சேர்க்கை இம்மாதம் 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, சேர்ந்து பயில விரும்பும் தகுதியானோர் www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆக. 22ம்தேதி மாலை 5 மணி வரைஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெறும் எஸ்.சி., எஸ்.டி. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, டிஎன்சி வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் கல்வி உதவித் தொகை பெற்றுத்தரப்படும். இவ்வாறு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர்ந்து பயில விரும்புவோர் குறைந்தபட்சம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். அத்துடன் 01.07.2025 அன்று 17வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழியில் மட்டுமே பயிற்சி நடைபெறும். கூட்டுறவு மேலாண்மை பட்டயம் படிப்பிற்கான காலம் ஓராண்டு ஆகும். இரு பருவங்களாக செமஸ்டர் வகுப்புகள் நாளை (ஆக.4ம் தேதி) திங்கட்கிழமை முதல் துவக்கப்படும்.

பயிற்சியில் சேருவது குறித்த நிபந்தனைகள் மற்றும் விளக்கங்கள் www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இணைய வழி மட்டுமேவிண்ணப்பிக்கவேண்டும். இணையதளம் வழி விண்ணப்பகட்டணம் நூறு ரூபாயை மட்டும் வரும் ஆக. 22ம் தேதி மாலை 5 மணிவரை இணையதளம் மூலமாக விண்ணப்பம் சமர்ப்பிக்கவேண்டும். இணையதளத்தின் மூலம் விண்ணப்பம் சமர்ப்பித்து அதன் நகலினை பதிவிறக்கம் செய்து கல்விச்சான்றிதழ், பள்ளிமாற்றுசான்றிதழ், சாதிசான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன், திருநெல்வேலி என்.ஜி.ஓ. பி காலனியில் உதயாநகரில் செயல்படும் மேடைத்தளவாய் கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை சரிபார்க்கும் பொருட்டு உடன் நேரில் கொண்டு வரவேண்டும்.

ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டப் பின்னர் உடன் பயிற்சி கட்டணத்தை, திருநெல்வேலி என்.ஜி.ஓ. பி காலனியில் உதயாநகரில் அமைந்துள்ள மேடைதளவாய் குமாரசாமி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், உள்ள பே டிஎம் (Paytm) மூலம் பயிற்சிக் கட்டணமாக ரூ.20,750/ஐ செலுத்த வேண்டும். பயிற்சி கட்டணம் செலுத்திய அன்றே பயிற்சி வகுப்பில் சேரலாம் மேலும், கூடுதல் விவரங்களை மேடைதளவாய் குமாரசாமி கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வரை நேரடியாகவும் தொலைபேசி எண் 0462 2552695 என்ற தொலைபேசி எண் மற்றும் 9487411351 என்ற அலைபேசி எண் மூலமாகவும் தொடர்புகொண்டு தெரிந்துக் கொள்ளலாம். இவ்வாறு அதில் நெல்லை மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

The post பாளை. மேடை தளவாய் கூட்டுறவு மேலாண் நிலையத்தில் முழுநேர கூட்டுறவு பட்டயப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆக.22 வரை அவகாசம் appeared first on Dinakaran.

Tags : Polly ,Platform Logistics Cooperative Management Station ,Nella ,Pali ,Tamil Nadu Co-operative Union ,Platform Logistics Cooperative Management Center ,Dinakaran ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் சென்டர்...