×

பொதுவினியோகத் திட்டத்திற்காக தெலுங்கானாவில் இருந்து தஞ்சைக்கு 2700 டன் புழுங்கல் அரிசி வந்தது

 

 

தஞ்சாவூர், ஆக 4: தெலுங்கானாவில் இருந்து தஞ்சைக்கு 2700 டன் புழுங்கல் அரிசி தஞ்சை ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயிலில் வந்தது. தமிழகத்தில் பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு புழுங்கல்அரிசி, பச்சரிசி, கோதுமை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தெலுங்கானா மாநிலத்தில் இருந்து நேற்று சரக்கு ரயிலில் 42 வேகன்களில் 2700 டன் புழுங்கல் அரிசி தஞ்சை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சையில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டன. இந்த அரிசி மூட்டைகள் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் பொது வினியோகத்திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக அனுப்பி வைக்கப்படும்.

 

Tags : Thanjavur ,Telangana ,Thanjavur railway ,Tamil Nadu ,Thanjavur railway station ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை