×

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொல்லியல் வட்டம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் வலியுறுத்தல்

 

புதுக்கோட்டை, ஆக. 4: பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட பல தொல்லியல் எச்சங்கள் நிறைந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் தொல்லியல் வட்டம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் வலியுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாநகர கிளையின் 16-ஆவது மாநாடு புதுக்கோட்டையில் நடைபெற்றது. கிளைத் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமை வகித்தார். புதுகை புதல்வன் வரவேற்றார்செயலாளர் பீர்முகமது, அறிக்கைகளை வாசித்தார். ‘உள்ளங்கை உலகம்’ என்ற தலைப்பில் எஸ்.இளங்கோ பேசினார். மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் .கீதா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில துணைத் தலைவர் முத்துநிலவன், மாநிலக்குழு உறுப்பினர் கவிஞர் ஜீவி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட பல தொல்லியல் எச்சங்கள் நிறைந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் தொல்லியல் வட்டம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாதவன் நன்றி கூறினார்.

 

Tags : Pudukkottai District ,Tamil Nadu Progressive ,Pudukkottai ,Tamil Nadu Progressive Writers and Artists ,Porpanaikottai ,16th ,City ,Tamil Nadu Progressive Writers and Artists Association ,President ,Kasthuri Rangan ,Puthalvan ,Peermohammed ,S. Ilango ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை