சில்லி பாய்ன்ட்…

* ஜிம்பாப்வே – நியூசி. இன்று முதல் டெஸ்ட்
புலவயோ: ஜிம்பாப்வே சென்றுள்ள நியூசிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணி அங்கு 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் இன்று தொடங்குகிறது. தொடர்ந்து 2வது டெஸ்ட் ஆக. 7ம் தேதி தொடங்கும். இந்த போட்டிகள், ஜிம்பாப்வேயில் உள்ள புலவயோ நகரில் நடக்கும்.

* ஸ்மிருதி மந்தனாவை முந்திய நடாலியா
லண்டன்: இங்கிலாந்து – இந்தியா இடையே சமீபத்தில் இங்கிலாந்தில் முடிந்த ஒருநாள் தொடரில், அதிக ரன் குவித்த வீராங்கனையாக நடாலியா முதலிடம் முடித்தார். இந்நிலையில், மகளிருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில், இங்கிலாந்து கேப்டன் நடாலியா ப்ரன்ட் முதல் இடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தில் இருந்த இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

* மக்காவ் பேட்மின்டன் சீனாவில் துவக்கம்
மக்காவ்: சீனாவின் மக்காவ் தீவில் நேற்று மக்காவ் ஓபன் பேட்மிடன் தொடங்கியது. முதல் நாளில் தகுதிச் சுற்று மற்றும் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன. எனினும் முக்கிய வீரர்கள், வீராங்கனைகள் விளையாடும் முதல் சுற்று ஆட்டங்கள் இன்று நடைபெற உள்ளன.

The post சில்லி பாய்ன்ட்… appeared first on Dinakaran.

Related Stories: