புதுடெல்லி: கடந்த 2024ல் பாரீஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டிகளின்போது, நிர்ணயிக்கப்பட்டதை விட 100 கிராம் அதிகமாக உடல் எடை இருந்ததற்காக, இந்திய வீராங்கனை வினிஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதன்பின், மல்யுத்தப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக போகத் அறிவித்தார். இந்நிலையில், ஓய்வு முடிவை வாபஸ் பெற்று மீண்டும் போட்டிகளில் பங்கேற்பதென போகத் முடிவு செய்துள்ளார். இதையடுத்து, வரும் 2028ல் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக தீவிர பயிற்சிகளில் அவர் ஈடுபட உள்ளார்.
