5வது டி20யிலும் ஆஸி அசத்தல்: ஒயிட் வாஷ் ஆன வெஸ்ட் இண்டீஸ்

பாசெட்டர்: வெஸ்ட் இண்டீசுடனான கடைசி டி20 போட்டியிலும் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்று, தொடரை ஒயிட் வாஷ் செய்து அசத்தியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் – ஆஸ்திரேலியா இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் நேற்று காலை செயின்ட் கிட்ஸ் தீவின் பாசெட்டர் நகரில் நடந்தது. முதலில் ஆஸி பந்து வீச, வெ.இ மட்டையை சுழற்றியது. தொடக்கம் மட்டுமின்றி முடிவிலும் வெ.இ வீரர்கள் ரன் குவிக்க திணறினர். இடையில் சிம்ரன் ஹெட்மயர் 52 (31 பந்து), ஷெர்ஃபன் ரூதர்ஃபோர்ட் 35 (17 பந்து), ரன் எடுத்து ஸ்கோர் உயர உதவினர். எனவே, 19.4 ஓவரில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்தபோதும் 170 ரன்களை எட்ட முடிந்தது. அதன் பின், ஆடிய ஆஸ்திரேலியா, துவக்கத்தில் திணறலுடன் ஆடியது.

இருப்பினும், வெஸ்ட் இண்டீசைப் போல ஆஸி வீரர்கள் மிட்செல் ஓவன் 37 (17 பந்து), கேமரான் கிரீன் 32 (18 பந்து), டிம் டேவிட் 30 (12 பந்து) ரன் எடுத்து இலக்கை நோக்கி நகர உதவினர். தொடர்ந்து 8வது விக்கெட்டுக்கு இணை சேர்ந்த ஆரோன் ஹார்டி 28 (25 பந்து), சீன் அபோட் 5 (3 பந்து) ரன்னை ஆட்டமிழக்காமல் எடுத்து வெற்றியை எட்டினர். எனவே ஆஸி 17வது ஓவரின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. வெ.இ தரப்பில் அகேல் ஹோசின் 3, ஜேசன் ஹோல்டர், அல்ஜாரி ஜோசப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலியா 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்துள்ளது. ஏற்கனவே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரையும் ஆஸி 2-0 என்ற கணக்கில் முழுதாக வசப்படுத்தியது.

The post 5வது டி20யிலும் ஆஸி அசத்தல்: ஒயிட் வாஷ் ஆன வெஸ்ட் இண்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: