திருத்தணி, டிச.9: திருத்தணியில் ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து, திருத்தணியில் குடலிறக்கம் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு ஆலோசனை மருத்துவ முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. முகாமிற்கு, சங்கம் தலைவர் பரந்தாமன் தலைமை தாங்கினார். ஆசிரியர் மாசிலாமணி வரவேற்றார். இதில், தொடக்க கல்வி இயக்கம் துணை இயக்குநர் (நிர்வாகம்) சுப்பாராவ் பங்கேற்று முகாமை தொடங்கி வைத்தார். இதில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று வயிறு சம்பந்தமான பிரச்னைகளுக்கு மருத்துவ பரிசோதனை தொடர்பாக விழிப்புணர்வு பெற்றனர். ரோட்டரி சங்க நிர்வாகிகள் பிரசாத், காதர்பாஷா, பாலகுமார், வெங்கடேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
