பழைய நெல்லியாளம் பகுதியில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை

 

பந்தலூர், ஜூலை 22: பந்தலூர் அருகே பழைய நெல்லியாளம் பகுதியில் இருந்து கொளப்பள்ளி செல்லும் சாலையில் டேன்டீ ஒட்டிய பகுதியில் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
ஏற்கனவே போடப்பட்ட தார் சாலை முழுவதும் பழுதடைந்து வெறும் கற்கள் மட்டுமே கட்சி அளிக்கிறது. மழை காலங்களில் குண்டும் குழியுமாக இருக்கும் சாலையில் மழைநீர் சூழ்ந்து குனம் போல் காட்சியளிக்கின்றது.
இந்த சாலையில் தினந்தோறும் தனியார் வாகனங்கள், பள்ளி வாகனங்கள் என பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன.
அவசர மருத்துவ தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் கூட செல்ல இயலாத நிலையில் உள்ளது. இந்த சாலையை சம்பந்தபட்ட துறையினர் விரைவாக சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பழைய நெல்லியாளம் பகுதியில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: