ஊட்டி, டிச.8: ஒன்றிய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் ஊட்டியில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட விளையாட்டு மைதானத்தில் மேரா யுவ பாரத் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஓட்டப்பந்தயம், கயிறு இழுத்தல், கைப்பந்து, சிலம்பம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 400க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. ரஞ்சித்குமார் விளையாட்டு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
