புதிய கிளை நூலக கட்டுமான பணிகள் துவக்கம்

கூடலூர்,டிச.8: கூடலூர் ஊட்டி சாலையில் உள்ள நகராட்சி வணிக வளாகம் அருகில் கடந்த 1980ம் ஆண்டில் கட்டப்பட்ட கூடலூர் கிளை நூலகத்தின் பிரதான கட்டிடம் கடந்த 2022ம் ஆண்டில் பெய்த கனமழையில் இடிந்து விழுந்தது. இதில் இருந்த பல ஆயிரக்கணக்கான நூல்கள் மழை நீரில் சேதம் அடைந்தன. தற்போது இந்த கிளை நூலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

இந்நிலையில், நூலகத்திற்கான புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நூலகம் அமைந்திருந்த பகுதியில் துவங்கப்பட்டுள்ளது. ரூ.1.25 கோடி செலவில் புதிய நூலக கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்நிலையில், பொக்லைன் இயந்திரம் கொண்டு சமப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

 

Related Stories: