ரயில் பயணிகளிடம் திருடியவர் கைது

 

பாலக்காடு, ஜூலை 21: கடந்த ஜூலை. 14ம் தேதி கன்னியாகுமாரி – பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த இரண்டு பயணிகளின் தங்க நகைகள், எலக்ட்ராணிக் உபகரணங்கள் ஆகியவை திருட்டு போயின. இது குறித்து அந்த பயணிகள் பாலக்காடு சந்திப்பு ரயில்நிலைய போலீசாரிடம் புகார் மனுக்கள் அளித்தனர். அதன்பேரில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ரயி்ல் பயணிகளிடம் கொள்ளையடித்த நபரை சி.சி.டி.வி., கேமராக்கள் மூலமாக தேடி வந்தனர்.

பாலக்காடு, ஷொர்ணூர் சந்திப்பு ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டிருந்த கேமராக்களில் ரயில் பயணிகளிடம் தங்க நகைகள், எலக்ட்ராணிக் உபகரணங்கள் திருடிய மர்மநபர் குறித்து தகவல் கிடைத்தது. திருச்சிராப்பள்ளி காந்திநகர், ராம்ஜி நகரை சேர்ந்த ஹரிகரன் (28), என தெரியவந்தது. இவரை திருச்சிராப்பள்ளியில் வைத்து தமிழக போலீசார் உதவியுடன் ரயில்வே போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து திருட்டு தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஹரிகரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ரயில் பயணிகளிடம் திருடியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: