சிதம்பரம், ஜூலை 21: சிதம்பரம் அருகே உள்ள பரமேஸ்வரநல்லூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் மகன் ரவிச்சந்திரன். இவர் கடந்த 11ம் தேதி அரசுக்கு சொந்தமான கால்வாயில் இருந்து தண்ணீரை அனுமதி இன்றி டிராக்டரில் இணைக்கப்பட்ட மோட்டாரை பயன்படுத்தி வீடு கட்டுமான பணிக்கு பணத்திற்கு விற்பனை செய்து வருவதாக பரமேஸ்வரநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேலுக்கு தகவல் கிடைத்தது.
பின்னர் இதுகுறித்து கேட்டபோது, கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேலுக்கும், ரவிச்சந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ரவிச்சந்திரன் 3 பேருடன் சேர்ந்து கிராம நிர்வாக அலுவலரை அசிங்கமாக திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேல் சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட அறிவரசன் (எ) வினோத், தனக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது தவறானது எனவும், சம்பவம் நடந்த தேதியில் தான் சம்பவ இடத்தில் இல்லை எனவும், அந்த நேரத்தில் தான் ஹைதராபாத்தில் இருந்ததாகவும் கூறி தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
The post விஏஓவை தாக்கியதாக 4 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.
