விருத்தாசலம், டிச. 13: விருத்தாசலம் காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஞானமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று விருத்தாசலம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷன் நுழைவு வாயில் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் அருகே உள்ள சிறுகனூர் பகுதியைச் சேர்ந்த தங்கராசு மகன் பிரபாகரன் (40) என்பதும், இவர் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சாவை வைத்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிரபாகரன் மீது வழக்கு பதிந்து கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷன் அருகே கஞ்சா விற்றவர் கைது
- கஞ்சா
- விருத்தாசலம் ரயில்வே சந்திப்பு
- விருத்தாச்சலம்
- விருத்தாசலம் காவல் நிலையம்
- சிறப்பு
- சப்-இன்ஸ்பெக்டர்
- ஞானமூர்த்தி
- விருத்தாசலம் ரயில்வே சந்திப்பு...
