சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு 3 ஆண்டு சிறை கடலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

கடலூர், டிச. 13: கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் டிராவிட் (23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு 12.07.2021 அன்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அப்போது அந்த சிறுமி சத்தம் போடவே அங்கு வந்த சிறுமியின் தந்தை டிராவிட்டை தலை முடியை பிடித்து இழுத்தபோது டிராவிட் அவரை கீழே தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து டிராவிட்டை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கடலூர் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி குலசேகரன் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் வளர்மதி ஜெயச்சந்திரன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்கள், சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் டிராவிட்டுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Related Stories: