ரெட்டிச்சாவடி, டிச. 13: கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அடுத்த சின்ன கங்கணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ்(40). இவரது மகள் விஜயதர்ஷினி(19). இவர் புதுச்சேரியில் உள்ள பாரதிதாசன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று விஜயதர்ஷினி வீட்டிலிருந்து வெளியே சென்றவர், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் எங்கும் கிடைக்காதால், இது குறித்து அவரது தாய் வனிதா, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன விஜயதர்ஷினியை தேடி வருகின்றனர்.
கல்லூரி மாணவி மாயம்
- கல்லூரி
- ரெடிகாவடி
- வெங்கடேஷ்
- சின்ன கங்கனுபம்
- ரெட்டிசவாடி
- கடலூர் மாவட்டம்
- விஜயதர்ஷினி
- பாரதிதாசன் கல்லூரி
- புதுச்சேரி
