இரு தரப்பினர் மோதல் 17 பேர் மீது வழக்கு

கடலூர், ஜூலை 20: கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியை சேர்ந்தவர் விஜயபாலன். இவரும், கடலூர் தானம் நகர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் உறவினர்கள். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் ஒரு வழக்கில் ராஜ்குமார் சிறைக்கு சென்று மீண்டும் வெளியே வந்துள்ளார். சம்பவத்தன்று முன்விரோதம் காரணமாக விஜயபாலனுக்கும் ராஜ்குமாருக்கும் மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இந்த மோதலில் விஜயபாலனின் காரும், அவரது வீட்டின் சிசிடிவி கேமிராவும் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் இருதரப்பினருக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் நந்தினி (28), நடராஜன் (55), விக்னேஷ் (33), சதீஷ்குமார் (38), ராஜ்குமார் (35), இளமாறன் (14) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில், நந்தினி கொடுத்த புகாரின் பேரில் தானம் நகரை சேர்ந்த 9 பேர் மீதும், அதேபோல் சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் சங்கரநாயுடு தெருவை சேர்ந்த 8 பேர் மீதும் என மொத்தம் 17 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இரு தரப்பினர் மோதல் 17 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: