கூடலூர், ஜூலை 19: கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு உணவு தானியங்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கூடலூர் வழியாக கேரள மாநிலம் செல்லும் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. நாடுகாணி, கீழ்நாடுகாணி பகுதியில வந்தபோது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், போக்குவரத்து பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. கடந்த சில வருடங்களாக உரிய பராமரிப்பின்றி காணப்படும் இந்த சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு அதில் வாகனங்கள் சிக்கி சேதம் அடைந்து விபத்துகளும் ஏற்படுகின்றன.
பள்ளங்களில் தற்காலிகமாக ஜல்லி மண் கொட்டி சீரமைக்கப்பட்டுள்ள நிலையில் மழை காரணமாக மீண்டும் பள்ளங்கள் ஏற்பட்டு விபத்துகள் தொடர்கின்றன. இந்த நிலையில், சாலை பராமரிப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் மழைக்காலம் முடிந்ததும் முழுமையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்துள்ளனர்.
The post கீழ்நாடுகானி சாலையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.
