புதுடெல்லி: கடந்த 2023-2024 நிதியாண்டில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) புதிய சாதனையாக, 9,741 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் துவக்கப்பட்டன. அதுமுதல், பிசிசிஐயின் வருவாய் ராக்கெட் வேகத்தில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2023-24 நிதியாண்டில் பிசிசிஐ, ரூ.9,741 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதில் 59 சதவீதம் (ரூ.5,761 கோடி), ஐபிஎல் போட்டிகள் மூலம் கிடைத்துள்ளது. எனவே, ஐபிஎல், பிசிசிஐக்கு பொன் முட்டை இடும் வாத்தாக திகழ்கிறது. தவிர, ஐபிஎல் அல்லாத மீடியா உரிமைகள் மூலம், பிசிசிஐக்கு ரூ. 361 கோடி வருவாய் கிடைத்துள்ளது. பிசிசிஐ முதலீடுகளில் கிடைக்கும் வட்டித் தொகை, ரூ. 986 கோடி என தகவல்கள் கூறுகின்றன.
The post பிசிசிஐ வருவாய் ரூ. 9,741 கோடி appeared first on Dinakaran.