கருணுக்கு பதில் சாய் சுதர்சன்

முன்னாள் கிரிக்கெட் வீரர் தீப் தாஸ்குப்தா, ‘இங்கிலாந்துக்கு எதிராக எஞ்சியுள்ள 2 டெஸ்ட்களில் பெரிய மாற்றங்கள் செய்யத் தேவையில்லை. கருண் நாயருக்கு பதில் சாய் சுதர்சனனை களமிறக்க வேண்டும். கருண் நன்றாக தொடங்கினாலும், ரஞ்சியில் விளையாடுவது போன்று பெரிய ஸ்கோரை நோக்கி நகர முடியவில்லை.

எனவே சாய் சுதர்சன் சிறந்த மாற்றாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை. கூடவே வேகம் பும்ரா 1, 3, 5வது டெஸ்ட்களில் மட்டும் விளையாடுவார் என்ற வதந்திகளை கேள்விப்பட்டேன். தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கியிருப்பதால் பும்ரா 4வது டெஸ்ட்டிலும் விளையாட வேண்டியது கட்டாயம். கூடவே 3வது, 4வது டெஸ்ட் ஆட்டங்களுக்கு இடையில் 8 நாட்கள் இடைவெளி உள்ளது. எனவே உலகின் தலைச்சிறந்த பந்து வீச்சாளரை 4வது டெஸ்ட்டில் பயன்படுத்துவதால் அவருக்கு கூடுதல் சுமை ஏற்பட வாய்ப்பில்லை’ என்று வலியுறுத்தி உள்ளார்.

The post கருணுக்கு பதில் சாய் சுதர்சன் appeared first on Dinakaran.

Related Stories: