அரசு பேருந்தில் ஐடிஐ மாணவர்களை வழிமறித்து தாக்கிய கல்லூரி மாணவர்கள்

 

உளுந்தூர்பேட்டை, ஜூலை 17: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஐடிஐயில் 2ம் ஆண்டு கல்வி பயின்று வரும் மாணவர்கள் நேற்று நண்பர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு விருத்தாசலம் சென்று விட்டு அங்கிருந்து ஒரு அரசு பேருந்தில் உளுந்தூர்பேட்டை நோக்கி வந்தனர். அந்த பேருந்தில் வந்த கல்லூரி மாணவர்கள் சிலர் ஐடிஐ மாணவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதில் ஏற்பட்ட தகராறில் வடவாடி அருகில் ஐடிஐ மாணவர்களை கல்லூரி மாணவர்கள் தாக்கியுள்ளனர். இதன் பிறகு அங்கே இறங்கிய கல்லூரி மாணவர்கள் மீண்டும் இருசக்கர வாகனத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் வந்து உளுந்தூர்பேட்டை அருகே விருத்தாசலம் ரோடு மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த பேருந்தை வழிமறித்து ஐடிஐ மாணவர்களை கீழே இறக்கி சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் 2 மாணவர்களுக்கு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பேருந்தில் சென்ற ஐடிஐ மாணவர்களை கல்லூரி மாணவர்கள் வழிமறித்து தாக்கிய சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post அரசு பேருந்தில் ஐடிஐ மாணவர்களை வழிமறித்து தாக்கிய கல்லூரி மாணவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: