தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

 

ஊட்டி, ஜூலை 17: ஊட்டி நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் ரப்பர் கையுறை, காலுறை மற்றும் ரயின் கோட் உள்ளிட்டவைகள் வழங்கும் நிகழ்ச்சி அரசு கலை கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் நடந்தது. நகராட்சி நகர்நல அலுவலர் சிபி தலைமை வகித்து, தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

தூய்மை பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள், அபாயகரமான குப்பைகளை கையாளும் போது கண்டிப்பாக கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொள்வது அவசியம். உடல் நலனில் அக்கறையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும் பொதுமக்களிடம் இருந்து குப்பைகளை சேகரிக்கும் போது அவற்றை மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்து தருமாறு அறிவுறுத்த வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் சுகாதார ஆய்வாளர்கள் பாண்டி செந்தில்குமார், வைரம் மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் appeared first on Dinakaran.

Related Stories: