பாலத்தில் தூக்கிட்டு வக்கீல் தற்கொலை

 

பாலக்காடு, ஜூலை 17: பாலக்காடு அடுத்துள்ள ஸ்ரீகிருஷ்ணபுரம் அருகே கரிம்புழா பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன்குட்டி (54). பாலக்காடு மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வந்தார். கடம்பழிப்புரத்தில் மனைவி சீதாதேவி, மகள்கள் மாளவிகா, நந்தனா ஆகியோருடன் 10 ஆண்டுகளாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் கடம்பழிப்புரம் அருகே கொல்லியானி வாய்க்கால் பாலத்தின் கீழே நாராயணன்குட்டி தூக்குப்போட்ட நிலையில் சடலமாக காணப்பட்டார்.

தகவலறிந்த ஸ்ரீகிருஷ்ணபுரம் போலீசார் சம்பவத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தற்கொலையா? இல்லை முன்விரோதம் கொலை செய்யப்பட்டரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பாலத்தில் தூக்கிட்டு வக்கீல் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: