உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கூட்டுறவுத்துறை சார்பில் வழங்கப்படும் சேவைகள் குறித்து இணை பதிவாளர் ஆய்வு

 

ஊட்டி, ஜூலை 16: மக்களின் வீடு தேடி அரசுத்துறைகளின் சேவையை வழங்குவதற்காக உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறையில் மூலமாக 46 விதமான சேவைகளும் நகர்ப்புறங்களில் 13 அரசு துறைகள் மூலமாக 45 விதமான சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் குன்னூரில் நேற்று துவங்கியது.

இம்முகாமில் கூட்டுறவுத் துறையின் சார்பில் ஜெகதளா பேரூராட்சி, குன்னூர் பகுதி, சோலடாமட்டம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட முகாமில் வழங்கப்படுகின்ற சேவைகள் குறித்து நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன் நேரில் சென்று மேற்பார்வையிட்டார். இம்முகாமில் கூட்டுறவுத் துறையின் சார்பில் குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலமாக சுயதொழில் கடன் கால்நடை பராமரிப்பு கடன் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு கடன் ஆகியவைகளுக்கான விண்ணப்பம் வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படன.

The post உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கூட்டுறவுத்துறை சார்பில் வழங்கப்படும் சேவைகள் குறித்து இணை பதிவாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: