அல்காரசை வீழ்த்தி அசத்தல் விம்பிள்டன் வின்னர் நம்பர் 1 சின்னர்: முதல் முறை சாம்பியன்

லண்டன்: கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் லண்டன் மாநகரில் நடந்து வந்தன. இப்போட்டிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கிய நிலையில், முதல் அரை இறுதிப் போட்டியில் டென்னிஸ் உலகின் ஜாம்பவான், செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச்சை, இத்தாலியை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீரர் ஜானிக் சின்னர் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரை இறுதியில் அமெரிக்க வீரர் டெய்லர் ஃபிரிட்சை வீழ்த்தி, ஸ்பெயினை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீரர் கார்லோஸ் அல்காரஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

இந்நிலையில், சின்னர் – அல்காரஸ் இடையிலான இறுதிப் போட்டி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இப்போட்டியின் முதல் செட்டை அல்காரஸ் எளிதில் வசப்படுத்தினார். இருப்பினும், அடுத்த 3 செட்களிலும் துடிப்புடன் சாமர்த்தியமாக ஆடிய சின்னர் 3 செட்களையும் தொடர்ந்து கைப்பற்றினார். அதனால், 4-6, 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்ற சின்னர், முதல் முறையாக விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். வெற்றி பெற்ற சின்னருக்கு ரூ. 35 கோடியும், 2ம் இடம் பிடித்த அல்காரசுக்கு ரூ. 17.6 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.

 

The post அல்காரசை வீழ்த்தி அசத்தல் விம்பிள்டன் வின்னர் நம்பர் 1 சின்னர்: முதல் முறை சாம்பியன் appeared first on Dinakaran.

Related Stories: