அதன்படி ஜூன் மாத சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் மற்றும் ரபடாவும், இலங்கை வீரரான பதும் நிசங்காவும் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் மார்க்ரம் ஜூன் மாத சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதேபோல் சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் ஹேய்லி மேத்யூஸ் (வெஸ்ட் இண்டீஸ்), தஸ்மின் பிரிட்ஸ் (தென் ஆப்பிரிக்கா) மற்றும் அபி பிளெட்சர் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் சிறந்த வீராங்கனையாக ஹேய்லி மேத்யூஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த விருதை பெறுவது இதுவே 4-வது முறையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஜூன் மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருதினை வென்றார் எய்டன் மார்க்ரம்! appeared first on Dinakaran.
