புதுச்சேரி, ஜூலை 14: ஏம்பலம் தொகுதிக்கு உட்பட்ட கிருமாம்பாக்கம் பகுதியில் தனியாக அனைத்து வசதிகளுடன் 5 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு அரங்கம் அமைக்கக்கோரி கிருமாமபாக்கம், பனித்திட்டு, சேலியமேடு அரங்கனூர் உள்ளிட்ட 15 கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் கிருபாம்பாக்கம் மெயின் ரோட்டில் நேற்று நடந்தது. சோமநாதன் தலைமை தாங்கினார்.
சுசீந்திரன் வரவேற்றார். பல்வேறு அமைப்புகளை சேர்ந்த கலைவாணன், அருணாசலம், பரமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்கள் நலச்சங்க தலைவர் கராத்தே வளவன் கண்டன உரையாற்றினார். லெனின், வெற்றிச்செல்வன், பாகூர் ராமலிங்கம், மோகன்தாஸ், அன்புநிலவன், தந்தை பிரியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். போராட்டத்தில் நித்தியானந்தம், தினா, தமிழ்வாணன், குமரன், திருநாவுக்கரசு, மன்னர்சாமி மற்றும் வீரர், வீராங்கனைகள் பலரும் கலந்து கொண்டனர்.
The post கிருமாம்பாக்கத்தில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
