இந்நிலையில் கடந்த 11ம் ேததி காலை 6 மணிக்கு மத்திய சிறையின் முகப்பு பகுதியில் உள்ள சிறை பஜாரில் பணியாற்றுவதற்காக ராஜேந்திரன் உள்ளிட்ட 5 கைதிகளை சிறைக்காவலர் அழைத்து சென்றார். அங்கு பணி முடிந்து காலை 8.30 மணியளவில் சிறைக்கு கைதிகள் திரும்பினர். அப்போது சோதனை நடத்தியபோது ராஜேந்திரனை காணவில்லை. இதையடுத்து சிறைச்சாலை முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. அவர் தப்பி ஓடியது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான ராஜேந்திரனை தேடினர். இந்நிலையில் திருவெறும்பூர் அடுத்த சின்னசூரியூர் குளக்கரையில் பதுங்கியிருந்த ராஜேந்திரனை போலீசார் பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் சிறை தலைமை காவலர் ஜஸ்டின்ராஜ், சிறை காவலர்கள் தினேஷ், சண்முகராஜா ஆகிய 3 பேரை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை நிர்வாகம் நேற்று உத்தரவிட்டது.
The post திருச்சி சிறையில் இருந்து தப்பிய கைதி சிக்கினார்: 3 சிறை காவலர்கள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.
