* நான் இளையராஜா வீட்டின் மருமகளாக போக வேண்டியவள்
வனிதா விஜயகுமாரின் ‘மிசஸ் & மிஸ்டர்’ படத்தில் ‘சிவராத்திரி’ என்ற தனது பாடலை பயன்படுத்தியதாக இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து வனிதா விஜயகுமார் பேசும்போது, “நான் நேரில் சென்று இளையராஜா அப்பாவை பார்த்து ஆசீர்வாதம் பெற்று இந்த பாடல் விஷயத்தை சொன்னேன். அதற்கு அவரும் ஓகே என்று பதிலளித்தார். இளையராஜா ஒரு லெஜெண்ட், கடவுள் மாதிரி, கடவுளே நம்மிடம் கோவப்பட்டால் என்ன செய்வது. சின்ன வயதில் அவர் வீட்டில் வளர்ந்திருக்கிறேன். ஒரு நிறுவனத்தில் நாம் வீடு வாங்கி பத்திரப்பதிவு செய்கிறோம், பிறகு அந்த பூமி எனக்கு சொந்தம் என ஒருவர் வந்து வழக்கு தொடர்ந்தால் அந்த வழக்கை அந்த நிறுவனத்தின் மீது தான் கேஸ் போட வேண்டும். இதேபோல ‘குட் பேட் அக்லி’, ‘மஞ்சுமல் பாய்ஸ்’ படத்திற்கும் கேஸ் போட்டுள்ளார். அவர் குடும்பத்திற்காக நான் நிறைய உழைத்துள்ளேன். அந்த குடும்பத்தில் நானும் ஒருத்தி, மருமகளாக போக வேண்டியவள் நான்” என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
The post வனிதா நடிப்பில் வெளிவந்த படத்தில் உள்ள ‘சிவராத்திரி’ பாடலை நீக்க இளையராஜா வழக்கு appeared first on Dinakaran.
