வெளியேறும் சுற்றில் சான்பிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ் அணியை விரட்டிய, எம்ஐ நியூயார்க் அணியும் சவால் சுற்றுக்கு முன்னேறியது. இந்நிலையில் டல்லாசில் இன்று நடைபெறும் சவால் சுற்றில் டெக்சாஸ் – நியூயார்க் அணிகள் மோத உள்ளன. ஃபாப் டு பிளெஸிஸ் தலைமையிலான டெக்சாஸ் அணி மழையால் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பு தள்ளிப் போனது. அதற்கு பதிலடியாக இன்றைய ஆட்டத்தில் வென்று பைனலில் மீண்டும் வாஷிங்டனை வதைக்க காத்திருக்கிறது. அதற்கு கைகொடுக்க டாரியல் மிட்செல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டெவான் கான்வே, ஜியா உல் ஹக், நூர் அகமது ஆகியோர் காத்திருக்கின்றனர்.
இன்றைய ஆட்டத்தில் வெல்லும் அணி நாளை மறுநாள் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் வாஷிங்டனை எதிர்கொள்ளும். தட்டுதடுமாறி சவால் சுற்று வரை முன்னேறியுள்ள நிகோலஸ் பூரன் தலைமையிலான முன்னாள் சாம்பியன் நியுயார்க் அணியிலும் திறமைக்கு பஞ்சமில்லை. ஃபேபியன் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், கைரன் பொல்லார்ட், குயின்டன் டி காக், டிரென் போல்ட், விஜயகாந்த் விசயகாந்த் ஆகியோர் அணியை 2வது முறையாக பைனலுக்கு அழைத்துச் செல்ல காத்திருக்கின்றனர். டெக்சாஸ், முதல் முறையாக பைனலுக்கு முன்னேறும் ஆசையில் இருக்கிறது.
The post எம்எல்சி டி20 சவால் சுற்றில் மல்லுக்கு நிற்கும் டெக்சாஸ்-நியுயார்க்: வெல்லும் அணி இறுதிக்கு முன்னேறும் appeared first on Dinakaran.
