இதனால் செல்போனை பெண்ணின் கணவர் பறித்து, அதில் இருந்த மனைவியின் போட்டோக்களை அழித்துள்ளார். மேலும் இதுகுறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஆம்னி பஸ் வேலூருக்கு வந்ததும் வேலூர் வடக்கு போலீசார் பஸ்சில் இருந்த அந்த வாலிபரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த சையது இத்ராஸ் (27) என்பதும், அவரது பையில் கட்டுக்கட்டாக ரூ.16 லட்சம் பணம் இருந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து சையது இத்ராஸை கைது செய்து, அவர் கொண்டு வந்த பணம் ஹவாலா பணமா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஆம்னி பஸ்சில் இளம்பெண்ணை போட்டோ எடுத்த வாலிபரிடம் ரூ.16 லட்சம் சிக்கியது: ஹவாலா பணமா? appeared first on Dinakaran.
