மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்கும் அளவுக்கு வெளிக்காயமாகவோ பெரும் தாக்கம் நிறைந்த அறிகுறிகளுடன் கூடிய நோயாகவோ இல்லாமல் மனம் சார்ந்து இது பலமாற்றங்களை ஏற்படுத்துவதால் பிரசவத்தின் பெண் படும்பாடு சொல்லி மாளாது. முறையாக சிகிச்சை அளிக்காத பட்சத்தில் தான் பெற்ற குழந்தையையே தாய் கொலைசெய்யும் அளவுக்கு இதன் தாக்கம் நீளும். அத்தனை தீவிரமானது பிரசவத்துக்கு பின்னான அழுத்தம் என்பது. இப்படி மனம் அழுத்தத்தால் பெற்ற பிஞ்சிகளை கொன்று வீசிய தாய் கொடூர செயல் என பல செய்திகள் கேட்டுயிருப்போம். கடந்த ஜூன் 12ல் சென்னை அடுத்த நீலாங்கரை பகுதியில் பிறந்த 45நாட்களான இரட்டை குழந்தை ஒன்றை தாய் மாடியில் இருந்து தூக்கி போட்ட கொன்றது. கேரளாவில் 23 பெண் ஒருவர் தனது குழந்தையை மூச்சுத் திணறடித்து கொலை செய்தது என கடந்து போக முடியாத எண்ணிலடங்கா சம்பவங்களை மாதம் ஒருமுறையாவது கேட்டு இருப்போம்.
அந்த வரிசையில் தற்போது கர்நாடக கேசும் இணைந்து உள்ளது. பெங்களூர் அருகில் உள்ள நலமங்களா என்ற பகுதியை சார்ந்த ராதா என்ற பெண் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிறந்து 38 நாட்களே ஆனா தனது ஆண் குழந்தையை கொதிக்கும் வெந்நீரில் போட்டு கொலை செய்து உள்ளர். ராதாவுக்கு குறை பிரசவதில் குழந்தை பிறந்த நிலையில் அவர் சில நாட்களாக தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது. ராதாவின் கணவர் மதுக்கு அடிமையானதால் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக சொல்லப்படும் நிலையில், ராதா விஸ்வேஷ்புராவில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். சம்பவத்தன்று இரவு ராதாவின் குழந்தை அழத் தொடங்கியுள்ளது.
பால்குடுதலும் குடிக்காமல் அழுத்த குழந்தையை ஒரு பாத்திரத்தில் வெந்நீரை காயவைத்து அதில் துக்கி வைத்துள்ளார். இதில் தீக்காயம் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றன. பிரசவத்துக்கு பிறகான மனம் அழுதால் ராதா பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகதிக்கும் காவல்துறையினர், அதனால் அவர் இப்படி செய்து இருக்கலாம் என்று கூறுகின்றனர். இந்நிலையில், ராதா செய்தது கொடூர செயல் என பலரும் விமர்சித்து வருகின்றனர். இவற்றை எல்லாம் தாண்டி முறையான சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனை மட்டுமே இவர்களை இதுபோன்ற அழுத்தத்தில் இருந்து மீட்டு கொண்டுவரும் என்பது நிதர்சனமான உண்மை.
The post வெந்நீரில் குழந்தையை போட்ட தாய்.. துடிதுடித்து இறந்த பிஞ்சு; கர்நாடகாவில் நடந்த அதிர்ச்சி!! appeared first on Dinakaran.
