ஐபிஎல் டிக்கெட் மோசடி தொடர்பாக ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் உள்பட நிர்வாகிகள் 4 பேர் கைது


ஐதராபாத்: ஐதராபாத் காவல்துறையீனர் ஐதராபாத் கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள் நான்கு பேரை தற்போது கைது செய்திருக்கின்றனர். இதில் மிக முக்கியமாக அந்த சங்கத்தின் தலைவரான ஜெகன்மோகன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீது ஏமாற்றுதல் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் சுமார் ரூ. 2 கோடிக்கு மேலான பணத்தை இவர்கள் கையாடல்செய்ததாக குற்றச்சாட்டு இருந்தது. அதை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மிக முக்கியமாக இந்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியானது ஒரு குற்றசாட்டை முன்வைத்தது. அதாவது ஏற்கனவே நிர்ணயிக்கபட்டிருக்கக்கூடிய 3,900 டிக்கெட்களை அதாவது இந்த சங்கத்திற்கான தரவேண்டிய அந்த டிக்கெட்டுகளை தவிர அந்த மைதானத்தில் இருக்க கூடிய 10 சதவீதம் டிக்கெட்களை தங்களுக்கு வழங்கவேண்டும் என்று வற்புறுத்தியதாகவும், அதேபோல தங்களுக்கு மிரட்டல் விடுப்பதாகவும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் குற்றம் சட்டியிருந்தது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் இது தொடர்பாக பதிவிட்டிருந்தார். அந்த சங்கத்தில் இருக்க கூடிய தலைவர் மற்றும் உறுப்பினருக்கு ஏதிராக பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து அவர்கள் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு இவர்கள் தற்போது கைதுசெய்யப்பட்டார்.

The post ஐபிஎல் டிக்கெட் மோசடி தொடர்பாக ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் உள்பட நிர்வாகிகள் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: