காரைக்கால் மாங்கனி திருவிழாவையொட்டி இன்று விடுமுறை

புதுச்சேரி, ஜூலை 10: புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காரைக்கால் பகுதியில் உள்ள புகழ்பெற்ற காரைக்கால் அம்மையார் ேகாவிலில் மாங்கனி திருவிழா 8ம் தேதி முதல் 11ம் தேதி பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தெய்வங்களின் புனித திருக்கல்யாணம் 9ம் தேதி அன்று நடைபெற உள்ளது. மேலும், பக்தர்களுக்கு மாம்பழங்களை பொழியும் மங்களகரமான நிகழ்வு 10ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் புதுச்சேரி கவர்னர் ஒப்புதலுடன், காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழா கொண்டாடுவதற்காக காரைக்கால் பகுதிக்கு 10ம் தேதி (இன்று) உள்ளூர் விடுமுறை (அரசு அலுவலகங்கள்/ நிறுவனங்கள்/ கல்வி நிறுவனங்கள்) அறிவிக்கப்படுகிறது. அதற்கு ஈடுசெய்யும் வேலை நாளாக (19ம் தேதி) சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post காரைக்கால் மாங்கனி திருவிழாவையொட்டி இன்று விடுமுறை appeared first on Dinakaran.

Related Stories: