வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையை சேர்ந்தவர் சந்தரமோகன்(41). இவர், தனக்கு சொந்தமான பைபர் படகில் நாவுக்கரசன்(35), ரஞ்சித்(30), சோழராஜன்(30) ஆகியோருடன் ஆறுகாட்டுதுறையில் இருந்து கடலில் மீன்பிடிக்க நேற்றுமுன்தினம் மதியம் சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அந்த வழியாக இரண்டு படகில் வந்த 6 இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் சுற்றி வளைத்து கற்களால் தாக்கினர். பின்னர் ஆயுதங்களுடன் பைபர் படகில் ஏறி ரூ.2 லட்சம் மதிப்பிலான 300 கிலோ எடை கொண்ட வலையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினர். இதே போல் கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டுயிருந்த ஆறுகாட்டுதுறையை சேர்ந்த மீனவர்களான பொண்ணுதுரை, கார்த்தி ஆகியோரை இலங்கை கடற்கொள்ளையர்கள் கற்களை தாக்கி விரட்டினர்.
The post மீனவர்களை தாக்கி ரூ.2 லட்சம் வலை பறிப்பு appeared first on Dinakaran.