சின்னசேலம் : சேலம் மாவட்ட பகுதியில் இருந்து சின்னசேலம் வழியாக காரில் ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக கீழ்குப்பம் போலீசாருக்கு நேற்று காலை ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நைனார்பாளையம் நான்கு முனை சந்திப்பில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது வீ.கூட்ரோடு மார்க்கத்தில் இருந்து அதிவேகமாக வந்த காரை கையை காட்டி நிறுத்தியபோது நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளனர்.
இதையடுத்து போலீசார் துரத்தி சென்று மடக்கிப்பிடித்தனர். பின் கார் டிக்கியை திறந்து சோதனை செய்ததில் 14 மூட்டையில் சுமார் 210 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் பாக்கெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
மேலும் காரில் இருந்தவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் ராஜஸ்தானை சேர்ந்த சுக்காராம்(20), தேர்ராம்(25) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 வாலிபர்களையும் கைது செய்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஹான்ஸ் பாக்கெட் மூட்டைகள், ரூ.20 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.
The post சின்னசேலம் அருகே ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், சொகுசு கார் பறிமுதல் appeared first on Dinakaran.
