இப்போட்டியில் அதிரடியாக ஆடிய ஸ்பெயின் வீராங்கனைகள் அலெக்சியா புடெலாஸ் 2, ஐரீன் பரேடெஸ், எஸ்தர் கோன்சலாஸ், மரியோனா கால்டென்டே, கிளாடியா பினா தலா ஒரு கோல் என, 6 கோல்கள் அடித்தனர். பெல்ஜியம் வீராங்கனைகள் ஜஸ்டின் வன்ஹீவ்மேட், ஹன்னா யர்லிங்ஸ் தலா ஒரு கோல் போட்டனர். அதனால், 6-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அபார வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் ஐஸ்லாந்து அணியை, 2-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து வென்றது. நேற்று நடந்த போட்டியில் போர்ச்சுகல், இத்தாலி அணிகள் மோதின. இரு அணிகளும் சம பலத்துடன் மோதிய இப்போட்டி, 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
The post எளிதில் வீழ்ந்த பெல்ஜியம்: யூரோ 2025 மகளிர் கால்பந்து ஸ்பெயின் கோல் மழை appeared first on Dinakaran.
