ஆனாலும் அந்த இளம்பெண் தொடர்ந்து அடிக்க முற்பட்டபோது காதலன் அதை தடுத்துக்கொண்டே இருந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சாலையில் சென்ற பொதுமக்கள் அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தெரிவித்தனர். மேலும் தாக்குதல் காட்சிகளை செல்போனில் பதிவு செய்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் தடுத்து நிறுத்தி, விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில், கோவை வடவள்ளியை சேர்ந்த அந்த பெண்ணும், திருப்பூர் அவிநாசிபாளையத்தைச் சேர்ந்த இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.
பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து திருமணம் செய்யாமலே கடந்த 9 மாதமாக கோவையில் தனியாக வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். ஆனால், கடந்த சில நாட்களாகவே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. மேலும் திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும் இருவரும் பிரிந்து சென்றுவிடலாம் என்றும் காதலன் வற்புறுத்தி வந்துள்ளார். 9 மாதமாக உல்லாசமாக குடும்பம் நடத்தி விட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றியதால் ஏற்பட்ட விரக்தியில் அந்த இளம்பெண் பொது இடம் என்றும் பார்க்காமல் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்றனர். பின்னர் இருவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். முறையாக இருதரப்பிலும் புகார் மனு எதுவும் கொடுக்காததால் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறினர். கடந்த சில மாங்களுக்கு முன்பு கோவை விமான நிலையத்தில் ஒரு இளம்பெண், தன்னை காதலித்த வாலிபர் வேறொருவரை திருமணம் செய்து கொண்டதாக தகராறில் ஈடுபட்ட வீடியோ வைரலானது. தற்போது கலெக்டர் அலுவலம் முன்பு காதல் ஜோடி இருவரும் நடு ரோட்டில் சண்டையிட்ட சம்பவம் அப்பகுதியில் நடந்து சென்ற மக்கள் இடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியுள்ளது.
The post 9 மாதம் குடும்பம் நடத்திவிட்டு திருமணத்திற்கு மறுப்பு காதலனுக்கு நடுரோட்டில் கும்மாங்குத்து விட்ட காதலி: கோவையில் பரபரப்பு appeared first on Dinakaran.
