கடலூர், ஜூலை 9: கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். திருமாணிக்குழி கெடிலம் ஆறு பகுதியில் சேவல் சண்டை போட்டி நடத்தி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் காராமணிகுப்பம் பகுதியைச் சேர்ந்த திலீபன் (34), நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த வசந்த்ராஜ் (31), முதுநகர் பகுதியைச் சேர்ந்த பாரத் (31), பாகூர் சின்ன ஆராய்ச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் ராஜ் (25), எஸ்.குமராபுரம் பகுதி சேர்ந்த அஜய்குமார் (20) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்து 4 பைக்கை பறிமுதல் செய்தனர்.
The post சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது appeared first on Dinakaran.
