அவரை அவுட் செய்ய முடியாமல் ஜிம்பாப்வே வீரர்கள் திணறினர். உணவு இடைவேளையின் போது, தென் ஆப்ரிக்கா 5 விக்கெட் இழந்து 626 ரன் விளாசி இருந்தது. முல்டர் 334 பந்துகளில் 4 சிக்சர், 49 பவுண்டரிகளுடன் 367 ரன் குவித்து நங்கூரமாய் நின்றிருந்தார். டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்ச ரன்னாக 400 ரன் குவித்த வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாராவின் சாதனையை முறியடிக்க, முல்டருக்கு இன்னும் 34 ரன்களே தேவை என்றபோதிலும், தென் ஆப்ரிக்கா அணி டிக்ளேர் செய்து, ஜிம்பாப்வேயை ஆடச் செய்தது. அதனால், பல சாதனைகளை தகர்க்கும் வாய்ப்பு முல்டருக்கு பறிபோனது.
இருப்பினும், டெஸ்ட் போட்டிகளில் 5வது அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை முல்டர் படைத்தார். அவருக்கு முன், பிரையன் லாரா (400 நாட் அவுட்), மேத்யு ஹெய்டன் (380 ரன்), பிரையன் லாரா (375 ரன்), மஹேல ஜெயவர்தனே (374) ஆகியோர் மட்டுமே உள்ளனர். இந்த வீரர்கள் பட்டியலில் சிறந்த ஸ்டிரைக் ரேட்டுக்கு (109.88) சொந்தக்காரராக முல்டர் உருவெடுத்துள்ளார். முல்டர், 297 பந்துகளில் 300 ரன் எடுத்து, 2வது அதிவேக முச்சத சாதனை படைத்தார். அவருக்கு முன்பாக, 278 பந்துகளில் 300 ரன் எடுத்த வீரராக இந்தியாவின் வீரேந்திர ஷேவாக் உள்ளார்.
The post கதறிய ஜிம்பாப்வே பவுலர்கள் முரட்டு காளை முல்டர் 367 ரன் நாட் அவுட் appeared first on Dinakaran.
