உலக குத்துச் சண்டை இந்தியாவுக்கு 3 தங்கம்: சாக்‌ஷி, ஜெய்ஸ்மின், நூபுர் அபாரம்

அஸ்தானா: கஜகஸ்தானில் நடந்த உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் சாக்‌ஷி, ஜெய்ஸ்மின், நூபுர் தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.
கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. 54 கிலோ எடைப் பிரிவில் நடந்த போட்டிகளில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி அபார வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.

57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை ஜெய்ஸ்மின், 80 கிலோவுக்கு கூடுதலான எடைப் பிரவில் இந்தியாவின் நூபுர் தங்கம் வென்று அசத்தினர். இப்போட்டிகளில் இந்தியாவுக்கு 3 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன. குத்துச் சண்டை போட்டிகளில் முதல் முறையாக இந்தியா அதிகபட்ச பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. இதற்கு முன், பிரேசில் நாட்டில் நடந்த குத்துச் சண்டை போட்டிகளில் இந்தியா அதிகபட்சமாக ஒரு தங்கம், ஒரு வெள்ளி உட்பட 6 பதக்கங்களை வென்றிருந்தது. அந்த சாதனையை இந்தியா தற்போது முறியடித்துள்ளது.

The post உலக குத்துச் சண்டை இந்தியாவுக்கு 3 தங்கம்: சாக்‌ஷி, ஜெய்ஸ்மின், நூபுர் அபாரம் appeared first on Dinakaran.

Related Stories: