திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே சுள்ளெரும்பு பழையகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (70). இவருக்கு அரசால் வழங்கப்பட்ட இலவச பட்டா நிலத்தில் கலைஞர் கனவு இல்லம் மூலமாக வீடு கட்டி வருகிறார். அங்கு வீடு கட்டுவதற்கு அதே ஊரைச் சேர்ந்த தங்கப்பாண்டி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம், பொன்ராஜ் ஆட்களை வைத்து வேலை செய்து கொண்டிருந்தபோது, தங்கப்பாண்டி கொலை மிரட்டல் விடுத்ததாக பொன்ராஜ் வேடசந்துார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்த வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையிலான போலீசார், பழையகோட்டை சென்றபோது, தங்கப்பாண்டி போலீசாருடன் தகராறில் ஈடுபட்டார். இந்நிலையில் தங்கப்பாண்டி மனைவி விஜயா, மகன் பிரபு இருவரும், போலீசார் தங்களை தாக்கியதாக கூறி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ வைரலானது. அந்த வீடியோவில், சம்பவமானது மிகைப்படுத்தி உண்மைக்கு புறம்பாக வெளியிடப்பட்டுள்ளதகாவும், இருப்பினும், இதுகுறித்து வேடசந்தூர் உட்கோட்ட டிஎஸ்பி பவித்ரா தலைமையில் விசாரணை நடத்த திண்டுக்கல் எஸ்பி பிரதீப் உத்தரவிட்டுள்ளார். மேலும், சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரப்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
The post வீடு புகுந்து போலீசார் தாக்கும் வீடியோ வைரல்: விசாரிக்க திண்டுக்கல் எஸ்பி உத்தரவு appeared first on Dinakaran.