அப்போது பொட்டல் காட்டில் மறைந்திருந்த அடையாளம் தெரியாத 3 பேர் கும்பல் திடீரென அரிவாளுடன், காரை வழிமறித்து நிறுத்தினர். உடனே அக்கும்பல் பார்த்திபனை கீழே இழுத்து போட்டு அரிவாளால் வெட்டினர். இதில் அவருக்கு தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது மனைவி ரேவதி அக்கும்பலிடமிருந்து அரிவாளை பறித்து கணவரை மீட்டார். பின்னர் அக்கும்பல் ரேவதியின் தாலி செயின், மோதிரங்கள் உள்பட 5 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றது. தகவலின்படி போலீசார் வந்து பார்த்திபனை சூலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிந்து, 4 தனிப்படைகள் அமைத்து கும்பலை தேடி வருகின்றனர்.
The post கோவையில் காரை வழிமறித்து கும்பல் அட்டூழியம்; ஏட்டுக்கு அரிவாள் வெட்டு மனைவியிடம் நகை பறிப்பு appeared first on Dinakaran.
